பாஜக மாவட்ட தலைவர் நிபந்தனை ஜாமினில் விடுதலை
பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்
கோவையில் தமிழக முதல் அமைச்சர் , தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்காக கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பாலாஜி உத்தம ராமசாமி மீது கலகத்தை தூண்டுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் கீழும், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவருடைய ஜாமீன் மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ராஜசேகர், அவருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டார். மேலும் பாலாஜி உத்தம ராமசாமி, 15 நாள்களுக்கு பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
Related Tags :
Next Story