பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்கக்கோரி பொதுமக்களுக்கு விலையில்லா தேங்காய் வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. விவசாய அணியினர் அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்காக நேற்று காலை பா.ஜ.க. விவசாய அணியினர் திரண்டனர். அப்போது போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி தலைமையில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார், பா.ஜ.க.வினர் தேங்காய் வழங்க அனுமதி மறுத்தனர். இதையடுத்து பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் மட்டும் செய்வதாக கூறியதால் போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து பொங்கல் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.