சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கண்டனம்


சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கண்டனம்
x

கோப்புப்படம்

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி மீது அமலாக்க இயக்குனரகத்தைப் பயன்படுத்தி ஆளும் பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் மூர்க்கத்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்.

சாமானியர்களின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு பதில் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக இது போன்ற திசை திருப்பும் யுக்திகளைப் பயன்படுத்துகிறது.

அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும், அமலாக்க இயக்குனரகத்தை கட்டாயப்படுத்தி அல்ல" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.




Next Story