200 இடங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
200 இடங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
தஞ்சை கல்லுக்குளம் அருகே தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பா.ஜ.க.வின் ஆன்மிகப்பிரிவு மாநில செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ், ராஜன், மாநகர பொருளாளர் சாமிநாதன், மாநகர செயலாளர் ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை தடுக்க கூடாது. உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல் தஞ்சை மாநகரில் 50 இடங்களிலும், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளில் 60 இடங்களிலும், ஒரத்தநாடு, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், வல்லம் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகள் என தெற்கு மாவட்டத்தில் மட்டும் 200 இடங்களில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தெரிவித்தார்.