டெல்டா மாவட்டத்தில் பா.ஜ.க. தொடர் போராட்டம்


டெல்டா மாவட்டத்தில் பா.ஜ.க. தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:06 AM IST (Updated: 29 Jun 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டத்தில் பா.ஜ.க. தொடர் போராட்டம் என்று மாநில பொதுச்செயலாளர் கூறினார்.

புதுக்கோட்டை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. நிா்வாகிகள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் நேற்று அவர்களை பார்வையிட்ட பின் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ``கைது நடவடிக்கை மூலம் பா.ஜ.க.வை மிரட்டலாம் என நினைக்கின்றனர். நாங்கள் அதற்கு அச்சப்பட மாட்டோம். கும்பகோணத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும் வரை டெல்டா மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும். போராட்டம் நடத்தும் பா.ஜ.க.வினரை கைது செய்தாலும், அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். கைது நடவடிக்கை மூலம் பா.ஜ.க.வை ஒடுக்கிவிடலாம் என தி.மு.க. நினைக்கிறது. இது நடக்கவே நடக்காது'' என்றார்.


Next Story