நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுமா?


நீலகிரி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுமா?
x
தினத்தந்தி 27 Jun 2023 3:15 AM IST (Updated: 27 Jun 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து மத்திய மந்திரி எல்.முருகன் பதலளித்தார்.

நீலகிரி


குன்னூர்


நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்பது குறித்து மத்திய மந்திரி எல்.முருகன் பதலளித்தார்.


பொதுக்கூட்டம்


நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வருகை தந்தார். பின்னர் அவர் குன்னூர் வி.பி. தெருவில் நடைபெற்ற மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்றார். முன்னதாக அவர் படுகர் இன மக்களின் மொழியில் வணக்கம் தெரிவித்தார்.


அதன் பின்னர் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-


மீண்டும் ஆட்சியமைக்கும்


அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கை தான் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடினர்.


அந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவதாக தெரிவித்து உள்ளனர். பா.ஜ.க.வை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது. எதிர்க்கட்சிகளின் வியூகம் நாடாளுமன்ற தேர்தலில் பலிக்காது.


இந்த தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி ஆட்சி அமைக்கும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து கட்சியின் நிலைபாடு மற்றும் வேட்பாளர் யார் என்பதை மேலிடம் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story