புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு: வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிப்பு:  வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் பா.ஜ.க. பிரமுகர் கார் எரிக்கப்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கார் எரிப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. பிரமுகர் சிவசேகருக்கு சொந்தமான கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கார் எரிந்து முழுமையாக சேதமானது. இந்த சம்பவம் குறித்து சிவசேகர் அளித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதைத்தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், மசூதி, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்தி கோவை மெயின் ரோடு, பவானிசாகர் ரோடு, எஸ்.ஆர்.டி.நகர் போன்ற பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story