மத்திய அரசின் நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க பா.ஜனதா வலியுறுத்தல்


மத்திய அரசின் நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க பா.ஜனதா வலியுறுத்தல்
x

மத்திய அரசின் நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க வேண்டும் என பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் பா.ஜனதா பிற்பட்டோர் பிரிவு அணியின் மாநில செயலாளர் சாய்குமார் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, பா.ஜனதா ஆட்சி அமைந்திட தீவிர தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. எனவே கஞ்சா விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். ஏழை, எளிய அடித்தள மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசின் நவோதயா பள்ளியை பெரம்பலூரில் தொடங்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுக்கு சேர்க்காமல் தி.மு.க.வினருக்கு கொண்டு சேர்க்கும் தி.மு.க. அரசை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட, மண்டல், நகர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story