மக்களைப் பற்றி சிந்திக்காமல் பாஜக மத அரசியல் செய்து வருகிறது - துரை வைகோ குற்றச்சாட்டு


மக்களைப் பற்றி சிந்திக்காமல் பாஜக மத அரசியல் செய்து வருகிறது - துரை வைகோ குற்றச்சாட்டு
x

மக்களைப் பற்றி சிந்திக்காமல் பாஜக மத அரசியல் செய்து வருவதாக துரை வைகோ கூறியுள்ளார்.

சிவகாசி,

சிவகாசி கணேஷ் தியேட்டரில் இன்று காலை மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ கட்சி பிரமுகர்களுடன் திரைபடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

வைகோவின் தியாகம், உழைப்பும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. தமிழகத்துக்காக 56 வருடங்கள் வைகோ உழைத்து இருக்கிறார். நிறைய தியாகங்கள் செய்து இருக்கிறார். இந்த படத்தை பார்த்த பின்னர் பலர் வைகோ இவ்வளவு தியாகங்கள் செய்து இருக்கிறாரா? என்று கேட்டு பிரம்மித்தனர்.

வைகோவை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்ற வேண்டும். ம.தி.மு.க கட்சி வளர்ச்சியை நோக்கி செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கட்சியில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். மக்களை பற்றி சிந்திக்காமல் பா.ஜ.க. மத அரசியல் செய்து வருகிறது.

திருவள்ளூவரில் தொடங்கிய மத அரசியல் இன்று ராஜராஜசோழன் வரை கொண்டு வந்துள்ளனர். தலைவர்கள் ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டவர்கள். அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர்கள். ஜனநாயகப்படி தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். ஏதோ ஒரு காரணத்தை கூறி அந்த அரசை கவிழ்பது நியாயம் இல்லை.

மக்கள் நல்ல விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள். ஆதனால் ஆட்சி கவிழ்ப்பு எண்ணம் தோல்வியில் முடியும். தமிழக கவர்னர், தனது பணியை செய்யாமல் பா.ஜ.க.வின் முகவராக செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story