சரித்திரத்தை திருப்பி எழுத பா.ஜனதா முயற்சிக்கிறது-கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு


சரித்திரத்தை திருப்பி எழுத பா.ஜனதா முயற்சிக்கிறது-கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
x

பாரதம் விவகாரத்தில் சரித்திரத்தை திருப்பி எழுத பா.ஜனதா முயற்சிப்பதாக கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டை

புதிய ரூபாய் நோட்டுகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய பா.ஜனதா அரசு இந்தியாவை பாரதம் என பெயர் மாற்ற முயற்சி செய்து வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழும். உதாரணத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்றுதான் உள்ளது. அதனை ரிசர்வ் பேங்க் ஆப் பாரதம் என்று மாற்றினால் அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற்று விட்டு புதிய ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் புதிதாக அச்சடிக்கும் நிலை ஏற்படும்.

அதேபோல் பாஸ்போர்ட்டில் ரிபப்ளிக் ஆப் இந்தியா என்று தான் உள்ளது. அதனை ரிபப்ளிக் ஆப் பாரத் என்று அதிகார பூர்வமாக மாற்றினால் அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் வாபஸ் பெற்று புது பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும். இதனால் பெரிய அளவில் செலவினங்களும், அசவுகரியங்களும் ஏற்படும்.

சரித்திரத்தை திருப்பி எழுத...

எங்களது கூட்டணி பெயரை பாரத் என்று வைத்து விட்டால் இந்தியாவை இந்துஸ்தான் என்று பெயரை மாற்றி வைத்து விடுவார்களா?. இது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. சரித்திரத்தை திருப்பி எழுத பா.ஜனதா முயற்சிக்கிறதே தவிர ஆக்கப்பூர்வ மற்றும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை ெசய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் கூறினாரே தவிர எந்த மதத்தையோ, வழிபாட்டையோ அவர் குறை கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story