பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது வழக்கு


பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது வழக்கு
x

பா.ஜனதா ஐ.டி. பிரிவு தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.வி. தினகரன் நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் .காமினியிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் பா.ஜனதாவின் ஐ.டி. பிரிவின் தேசிய தலைவர் அமித் மாளவியா, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளியை டுவிட்டரில் பதிவேற்றி, சனாதனத்தை பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீதம் மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்று பொய்யான செய்தியை பதிவிட்டுள்ளார். சனாதனம் குறித்து தான் பேசிய பேச்சு குறித்து தனது பேச்சின் சாராம்சத்தை தெளிவு படுத்தி பதிலளித்த பின்பும், அதை நீக்கவில்லை. அமித் மாளவியாவின் கருத்து சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்பேரில், அமித் மாளவியா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 (கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டும் என்றே செயல்படுதல்), 153 ஏ (வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகையை வளர்த்தலும், ஒற்றுமைக்கு குந்தகமான செய்கைகளை செய்தலும்), 504 உட்கருத்துடன் அமைதியின்மையை வேண்டுமென்றே நிந்தித்தல், 505 (1) (பி) பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story