போலீஸ் கமிஷனரிடம், பா.ஜனதா வக்கீல்கள் மனு


போலீஸ் கமிஷனரிடம், பா.ஜனதா வக்கீல்கள் மனு
x

போலீஸ் கமிஷனரிடம், பா.ஜனதா வக்கீல்கள் புகார் மனு அளித்தனர்

திருநெல்வேலி

பாரதீய ஜனதா கட்சி வக்கீல் அணி மாநில செயலாளர் சிவசூரிய நாராயணன், நெல்லை மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி மற்றும் வக்கீல்கள் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ''விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் ஒழுந்தியபட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், பிரதமர் மோடி, பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை அவதூறாக பேசியும் சமூக வலைத்தளத்தில் தகவல் பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலைக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.


Next Story