விபத்தில் காயம் அடைந்த பா.ஜனதா பிரமுகர் சாவு


விபத்தில் காயம் அடைந்த பா.ஜனதா பிரமுகர் சாவு
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் விபத்தில் காயம் அடைந்த பா.ஜனதா பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை ஆறுமுகம் நகர் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கழுகுமலை பகுதி பா.ஜனதா கிளை தலைவராகவும் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்ததும் பஸ்சில் கழுகுமலைக்கு வந்தார். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பூங்கா அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பெரியசாமிைய அவரது உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன்றி இன்றி நேற்று மதியம் பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து, விபத்ைத ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற கழுகுமலை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த அன்னராஜ் மகன் ஆண்ட்ரூஸ் (25) என்பவரை வலைவீசி தேடி வருகிறார். இறந்துபோன பெரியசாமிக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


Next Story