பா.ஜனதா கட்சியினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்


பா.ஜனதா கட்சியினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்
x

நெல்லை சந்திப்பில் பா.ஜனதா கட்சியினர், தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் பா.ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் இந்த ஊர்வலம் நடைபெற்றது. சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் சந்திப்பு ரெயில் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. அப்போது கைகளில் தேசிய கொடி ஏந்தி தேச பக்தி கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் முடிவில் காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் நயினார் பாலாஜி முன்னிலை வகித்தார். இதில் நெல்லை மாவட்ட இளைஞர் அணி தலைவர் அசோக், பா.ஜனதா மாவட்ட தலைவர் தயா சங்கர், செயலாளர் வேல் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story