பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட வர்த்தகப்பிரிவு சார்பில் மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வணிகர்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியில் நடந்தது.
வர்த்தக பிரிவு துணைத்தலைவர் குரு மகாராஜன் தலைமை தாங்கினார். மார்க்கெட் கணேசன் வரவேற்று பேசினார். வர்த்தகபிரிவு மாநில செயலாளர் அசோக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதைத்தொடர்ந்து மின்சார கட்டண அமைப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வணிகர்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், பா.ஜனதா மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி, நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர்கள் சுரேஷ், முத்து பலவேசம், நிர்வாகிகள் கோதை மாரியப்பன், பாலசுப்பிரமணியன், குமரன் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.