இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு காதொலி கருவி அனுப்பிய பா.ஜனதாவினர்


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு காதொலி கருவி அனுப்பிய பா.ஜனதாவினர்
x

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு காதொலி கருவியை பா.ஜனதாவினர் அனுப்பினர்.

புதுக்கோட்டை

இந்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கூறியது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் காது கேட்கவில்லை என சைகை மூலம் கூறி சென்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள காதொலி கருவியை தபால் நிலையத்தில் பதிவு தபால் மூலம் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜனதா அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று அனுப்பினர்.


Next Story