போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் கைது
ராணிப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை ராஜேஸ்வரி பஸ் நிறுத்த சந்திப்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முன்னதாகவே அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பா.ஜ.க.வினரை போராட்டம் நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேன் மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story