கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் - எடப்பாடி பழனிசாமி


கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் - எடப்பாடி பழனிசாமி
x

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சேலம்,

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலிமையாக உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தலைவர்களும் இதையே சொல்லி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி, மிக வலிமையான கூட்டணி. தி.மு.க. கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை தனது கருத்துகளை கூறி உள்ளார். அதனை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

இதனிடையே 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகி விட்டதாக இப்போதே யாரும் சொல்ல மாட்டார்கள். கூட்டணியை பொறுத்தவரை எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியம் இல்லை. அது தண்ணீரில் எழுதுவது போன்றது. இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் முன்னுரையும், முடிவுரையும் இப்போதே எழுதிவிட முடியாது.

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் அளவிற்கு எங்களின் வேட்பாளர்கள் இருக்க வேண்டும். மாற்றத்திற்கான எழுச்சியை இப்போதே பார்க்க ஆரம்பித்துவிட்டோம். 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதை யாரும் இப்போதே சொல்ல மாட்டார்கள். என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

இந்தநிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை. கூட்டணி தொடர்பாக மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் தான் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே சொல்லிவிட்டனர். அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே விருப்பம் என்றார்.

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.


Next Story