பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா
தேனியில் புதிதாக கட்டப்பட்ட பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகில் தேனி மாவட்ட பா.ஜ.க. புதிய அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் இருந்து காணொலி காட்சி மூலம் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் காணொலி காட்சி மூலம் விழாவில் பேசினர். பின்னர், தேனி மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், கூட்டுறவு பிரிவு மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக்கம் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில், மாநில செயற்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி, மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் சிவானந்தராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் மலைச்சாமி, மாரிச்செல்வம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சிவமுருகேஸ்வர பாண்டியன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.