பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்துக்கு பா.ஜனதா கட்சியினர் மரியாதை
வாசுதேவநல்லூரில் பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்துக்கு பா.ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பா.ஜனதா கட்சி சார்பில் பஸ்நிலையம் அருகே பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் பஞ்சாயத்து தலைவர் ராம்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜா, பாண்டித்துரை, மாவட்ட நிர்வாகிகள் சங்கரநாராயணன், தங்கராஜ், கருப்பசாமி மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story