தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்ப அட்டை உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை ரூ.1000 வழங்க வேண்டும். மாதந்தோறும் மின்சார அளவை கணக்கீடு செய்ய வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி குளித்தலை பஸ்நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை நகரத் தலைவர் கே.எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில மகளிர் அணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார். இதில் வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் உமாதேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் நமச்சிவாயம் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.