விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
நெமிலி, காவேரிப்பாக்கம் பகுதிகளில் விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெமிலியை அடுத்த திருமால்பூர் பகுதியில் நெமிலி மத்திய ஒன்றிய பா.ஜ.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெமிலி மத்திய ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் அருண்குமார், ஒன்றிய பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், மின்வெட்டு மற்றும் மின்கட்டணத்தை குறைக்கவும், மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைபடுத்தக்கோரியும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் நெமிலி, அசநெல்லிகுப்பம், மகேந்திரவாடி, காட்டுப்பாக்கம், காவேரிப்பாக்கம், கர்ணாவூர், கீழ்வீதி, பனப்பாக்கம், சிறுவளையம், வேகாமங்கலம், அத்திப்பட்டு, ஆலப்பாக்கம், சேரி, ஓச்சேரி, அவளூர், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.