திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

விழுப்புரம்

திண்டிவனம்

சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழ் கொட்டும் மழையில் மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர தலைவர் ரகு, மாநில வக்கீல் பிரிவு செயளாளர் செந்தில், மாவட்ட துணை தலைவர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துகொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்தும், அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகரதலைவர் முருகன் மற்றும் வக்கீல் பிரிவு தலைவர் ராஜா, நகர நிர்வாகிகள் நாகப்பன், ராதிகா, செங்கேனி, அன்னா கனேஷ், மதி, பாலாஜி, ராமசந்திரன், நாகபாசம், தண்டபாணி, பாலாஜி, நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவெண்ணெய்நல்லூர்

அதேபோல் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கணடித்து திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. மாநில கூட்டுறவு பிரிவு துணை தலைவர் ஏ.ர.வேலு தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் தென்னரசு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story