பஸ் வசதி செய்து தரக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


பஸ் வசதி செய்து தரக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் பா.ஜனதா கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் பா.ஜனதா கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் கோவிந்தன், மாவட்டச் செயலாளர் வெற்றி மாலை, கிழக்கு ஒன்றிய துணைத்தலைவர்கள் பாண்டிச்செல்வி, சதாசிவம், குமரவேல், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜனதா ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிக்கல் சுற்று வட்டார பகுதிகளான சேரந்தை, சேனாங்குறிச்சி, தனிச்சியம், டி கிருஷ்ணாபுரம், கிராமத்திற்கு பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும் அதே போல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் நேரத்திலும் பஸ் வசதி செய்து தர வேண்டும். பீ.கிரந்தை ஊராட்சி பகுதியில் குடிநீருக்காக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

சிக்கல் ஊருணியில் உள்ள கிணறுகளை தூர்வாரி குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி தலைவர் தமிழரசன், கமுதி ராமமூர்த்தி, இளைஞர் அணி பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தரவு மேலாண்மை பிரிவு ஒன்றிய தலைவர் விஜயலட்சுமி, பா.ஜனதா நிர்வாகி தங்கத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story