வள்ளியூரில் கொட்டும் மழையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


வள்ளியூரில் கொட்டும் மழையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

வள்ளியூரில் கொட்டும் மழையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story