பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்


பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்
x

கீழ்பென்னாத்தூரில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் கருங்காலிப்பம் சாலையில் உள்ள அந்தோணியார் தெருவில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பாக்யராஜ், மகளிரணி மாவட்ட பொது செயலாளர் சித்ராசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் பாவேந்தன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் கே.ஜி.குட்டி தீனதயாளன் கலந்துகொண்டு பேசினார். இதில் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் முருகேசன், ஒன்றிய மகளிரணி ரமணி, நகர நிர்வாகிகள் விஜயகுமார், திருமலை, வாசு உள்பட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.


Next Story