பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக பேரணி


x

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. மாநில அரசுகளும் உள்ளூர் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

ஆனால், மத்திய அரசு இதுவரை பலமுறை உயர்த்திவிட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்துவிட்டு மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும் என நிதி அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் மாபெரும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story