பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x

பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் நேற்று மதியம் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை சமீபத்தில் திருவாரூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.


Next Story