தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் பாஜகவினர் மனு
சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
சென்னை,
பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
சமீப காலமாக தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுகிறது.
பாஜக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, மற்றும் தோழமை அமைப்புக்களின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story