பா.ஜனதா கருத்தரங்கம்
கோவில்பட்டியில் பா.ஜனதா கருத்தரங்கம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்தித் தோப்பு ரோடு பா.ஜனதா வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதின் 47-வது ஆண்டினை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் கர்ணன் என்.பி. ராமன் கலந்து கொண்டு பேசினார்.
கருத்தரங்கத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவண கிருஷ்ணன், கிஷோர் குமார், வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தொழில்துறைப் பிரிவு மாவட்டச் செயலாளர் சீனிவாச ராகவன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் அனைத்து அணியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story