மக்களை குழப்புவதற்காகவே புதிய சிவில் சட்டம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள் -துரை வைகோ பேட்டி


மக்களை குழப்புவதற்காகவே புதிய சிவில் சட்டம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள் -துரை வைகோ பேட்டி
x

மக்களை குழப்புவதற்காகவே புதிய சிவில் சட்டம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள் என்று துரை வைகோ தெரிவித்தார்.

திருச்சி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கினார். கையெழுத்து இயக்கத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு (மாநகர்), டி.டி.சி.சேரன் (வடக்கு), மணவை தமிழ்மாணிக்கம் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் எஸ்.ஆர்.செந்தில், மாரி என்கிற பத்மநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, முஸ்தபா மற்றும் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி ம.தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எங்களின் கூட்டணி கட்சிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜனதாவினர் பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள். கையெழுத்து இயக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கையெழுத்து இட வில்லை. எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளனர். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் கட்சியின் தலைமையும், கூட்டணி கட்சி தலைமையும் தான் முடிவு செய்யும், என்றார்.


Next Story