பா.ஜ.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தஞ்சையில் வரவேற்பு


பா.ஜ.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தஞ்சையில் வரவேற்பு
x

பா.ஜ.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தஞ்சையில் வரவேற்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிள் ேபரணி இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து கடந்த 6-ந் தேதி தொடங்கி நெல்லை, மதுரை, திருச்சி வழியாக நேற்று தஞ்சை வந்தது. தஞ்சை வந்த பேரணிக்கு ரெயில் நிலையத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மேலிட பார்வையாளர் முரளிகணேஷ், இளைஞரணி மாவட்ட தலைவர் அருண், இளைரணி நிர்வாகி அன்பு ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்த பேரணி தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றது. தஞ்சை மாவட்டத்தில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. இளைஞரணியினர் இந்த பேரணியில் வடுவூர் வரை சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் பொருளாளர் விநாயகம், செயலாளர் முரளிதரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story