பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது:அண்ணாமலை கண்டனம்


பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது:அண்ணாமலை கண்டனம்
x

பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருக்கிறது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருக்கிறது. சமூக ஊடகங்களில் யாரோ வெளியிட்ட பதிவை இவர் மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்ட பிறகும் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் சவுதாமணி கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். தி.மு.க. அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story