தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்ற பா.ஜனதா கட்சியினர் கைது


தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்ற பா.ஜனதா கட்சியினர் கைது
x

நெல்லையில் தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்ற பா.ஜனதா கட்சியினர் கைது

திருநெல்வேலி

நெல்லை:

பிரதமர் நரேந்திரமோடியின் 8 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் நடக்கிறது. இந்த பேரணி நேற்று முதல் வருகிற 12-ந் தேதி வரை இளைஞர் அணி மாநிலத்தலைவர் ரமேஷ் ஷிவா தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் டக்கரம்மாள்புரத்தில் இருந்து மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை டக்கரம்மாள்புரத்திலிருந்து தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல பா.ஜனதாவினர் பாலாஜி நயினார் தலைமையில் திரண்டனர். இதில் மாவட்ட தலைவர் அ.தயா சங்கர், மாவட்ட பார்வையாளர் நீல முரளி யாதவ், மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ஆறுமுகம், இளைஞர் அணி வாகன பேரணி மாநில பொறுப்பாளர் ராஜேஷ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேரணி செல்ல முயன்ற பா.ஜனதாவினரை கைது செய்தனர். இதன்பிறகு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


Next Story