75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செஞ்சிக்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பா.ஜ.க.வினர்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க.வினர் செஞ்சிக்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினர்.
செஞ்சி,
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் பா.ஜ.க. சார்பில் செஞ்சிக்கோட்டை உச்சியில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏ.டி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான மீனாட்சி நித்திய சுந்தர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வி.ஏ.டி.கலிவரதன், கே.ஆர்.விநாயகம், எம்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோத் பி செல்வம் கலந்து கொண்டு செஞ்சிக்கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பழகன், ஏழுமலை, ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீரங்கன், செஞ்சி நகர தலைவர் தங்க ராமு, ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், எழிலரசன், ஏழுமலை, சத்தியமங்கலம் பாபு, அரசு தொடர்பு பிரிவு சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.