பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
வேலூரில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தி.மு.க. செய்யவில்லை என்று கூறி வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், வணிகப் பிரிவு மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாபு, ஜெகன்நாதன், மாவட்ட பொருளாளர் தீபக் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநில அரசு முன்வரவில்லை. குடும்ப தலைவிக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார்.