பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
திருப்பத்தூரில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் ஸ்டேட் வங்கி முன்பு மாவட்ட பா.ஜ.க.சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் வி.அன்பழகன், பொதுச் செயலாளர்கள கண்ணன், ஈஸ்வர், முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் கோ. வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசினார்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் நகர பொதுச் செயலாளர் ஆர்.சரவணன், டிவி.பார்த்திபன், பொதுச்செயலாளர் கவியரசு, மாவட்ட தொழில்பிரிவு தலைவர் பிரேம்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் ராஜேஷ்குமார் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.