பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x

மதுரை, திருமங்கலத்தில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

மதுரை

மதுரை, திருமங்கலத்தில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

தமிழக அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் பழங்காநத்தத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில வக்கீல்கள் பிரிவு தலைவர் வணங்காமுடி, பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட துணை தலைவர் ஜெயவேல், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு சங்கர்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருமங்கலத்தில் தமிழக அரசை கண்டித்து மதுரை புறநகர் மாவட்டம் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் சரவணகுமார், முருகன், மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, சின்ன இருளப்பன், வழக்கறிஞர் மாவட்ட பிரிவு தலைவர் கிருஷ்ணன், திருமங்கலம் முன்னாள் நகர்மன்ற தலைவர் நிரஞ்சன் வாழ்த்துரை வழங்கினர்.

கோஷம்

திருமங்கலம் நகரத் தலைவர் தமிழ்மணி, ஒன்றிய தலைவர்கள் கள்ளிக்குடி சரவணன், வடக்கு ஒன்றியம் சுரேஷ், திருமங்கலம் தெற்கு ஒன்றிய சரவணன், கல்லுப்பட்டி மேற்கு ஒன்றிய பாலமுருகன், கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க கோரியும், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரியும் கோஷம் எழுப்பினர். இதில் திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story