பா.ஜனதா கட்சியினர் மனு


பா.ஜனதா கட்சியினர் மனு
x

தூத்துக்குடி ஆஷ் மண்டபம் சீரமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையாளரிடம் பா.ஜனதா கட்சியினர் மனு

தூத்துக்குடி

பா.ஜனதா மாநில தொழில் பிரிவு செயலாளர் கொம்பன் கே.பாஸ்கர் தலைமையில், பா.ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் நேற்று மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் புனரமைப்பதாக அறிகிறோம். அவர் நமது நாட்டு விடுதலைக்கு எதிரானவர். விடுதலை போராட்ட வீரர் வ.உ.சி. உள்ளிட்டோரை கொடுமைப்படுத்தியவர். அவரது மணிமண்டபத்தை மக்கள் வரிப்பணத்தில் புனரமைப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், அழகுமுத்துகோன், மகாகவி பாரதியார் போன்றோரை அவமதிக்கும் செயல்.

எனவே ஆஷ் நினைவு மண்டபத்தை சீரமைக்க மக்கள் பணத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யக் கூடாது. மேலும் உடனடியாக அந்த நினைவு மண்டபத்தில் உள்ள ஆஷ் பெயரை நீக்க வேண்டும். நினைவு மண்டபத்தை வ.உ.சி. பூங்காவாக மாற்ற வேண்டும். வ.உ.சி, வாஞ்சிநாதன் ஆகியோர் சிலைகளை அங்கு நிறுவ வேண்டும். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதனை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story