கோவில் அருகே அசைவ உணவு விற்க தடைகோரி கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு


கோவில் அருகே அசைவ உணவு விற்க தடைகோரி கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு
x

கோவில் அருகே அசைவ உணவு விற்க தடைகோரி கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு அளித்தனர்.

திருச்சி

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெறும்பூரில் புராதன பெருமை வாய்ந்த எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி தோறும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் கிரிவலம் பாதை அருகே மாட்டிறைச்சி உள்பட அசைவ உணவுகள் விற்க ஏற்பாடு நடந்து வருவதை அறிந்தோம். இது ஆன்மிக பெரியோர்கள் மற்றும் சிவ பக்தர்கள் இடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். அப்போது, திருச்சி மாநகர் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன், திருவெறும்பூர் நகர் மண்டல் தலைவர் பாண்டியன், வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் மற்றும் திருவெறும்பூர் நகர், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story