பி.கே. மூக்கையா தேவர் நினைவிடத்தில் மரியாதை


பி.கே. மூக்கையா தேவர் நினைவிடத்தில் மரியாதை
x

பி.கே. மூக்கையா தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி

அகில இந்திய பார்வா்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, மாநில ெஜயலலிதா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன், உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா, கவுன்சிலர் சுதாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவசி, நீதிபதி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாணவர் அணி செயலாளர் வக்கீல் மகேந்திர பாண்டி, கூட்டுறவு சங்க தலைவர் ரகு, ஒன்றிய அவைத்தலைவர் பண்பாளன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான மகேந்திரன் தலைமையில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் ஒன்றிய செயலாளர்கள் மலேசியா பாண்டி, நரசிம்ம பெருமாள், சக்திவேல், உசிலம்பட்டி நகர் செயலாளர் குணசேகரபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரகதீஸ்வரன், எழுமலை நகர் செயலாளர் பக்ருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story