வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய கிராமமக்கள்


வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய கிராமமக்கள்
x

அரசு வழங்கிய இடத்தை அளவீடு செய்து கொடுக்காததால் தர்மபுரி அருகே கிராமமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சி ஆட்டுக்காரன்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த 106 பேருக்கு 1998-ம் ஆண்டு அரசு இலவச வீட்டு மனைபட்டா வழங்கியது. இதற்கான இடத்தை அதிகாரிகள் அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அந்த பகுதி மக்கள் சுதந்திர தினவிழாவான நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுதந்திர தினத்தை தாங்கள் புறக்கணிக்கவில்லை. எங்களது கோரிக்கையான அரசு வழங்கிய நிலத்தை அளந்து தரவேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியே நாங்கள் கருப்பு கொடி ஏற்றிருப்பதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். நாடே சுதந்திர தினவிழா கொண்டாடிய நிலையில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story