கருப்புக்கொடி காட்ட முயன்ற 60 பேர் கைது


கருப்புக்கொடி காட்ட முயன்ற 60 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2023 6:45 PM GMT (Updated: 18 April 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் வந்த கவர்னருக்கு எதிர்ப்பு ெதரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வந்த கவர்னருக்கு எதிர்ப்பு ெதரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ராமநாதபுரம் வந்தார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார்.

இந்தநிலையில் கவர்னர் வருகைக்கு, எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகி ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் சிவாஜி, மயில்வாகனன், கண்ணகி, செல்வராஜ், ம.தி.மு.க. நிர்வாகிகள் கராத்தே பழனிசாமி, பாம்பன் பேட்ரிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சேகரன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

60 பேர் கைது

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கவர்னர் செயல்படுவதாகவும், அவரை கண்டித்தும் கோஷமிட்டபடி கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 60 பேரை கைது செய்தனர்.


Next Story