மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்
வேப்பனப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தங்களுடைய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story