குடிநீர் கேட்டு சாலைமறியல்


குடிநீர் கேட்டு சாலைமறியல்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

31-வது வார்டு கணபதி பகுதியில் குடிநீர் கேட்டு சாலைமறியல்

கோயம்புத்தூர்


கோவை மாநகராட்சி 31 -வது வார்டு காமராஜபுரம் பகுதிக ளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை எனத் தெரிகிறது. இதனால்அந்த பகுதி மக்கள் குடிநீ ருக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து புகார் தெரி வித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கணபதி சங்கனூர் ரோட்டில் தனியார் கார் ஷோரூம் முன்பு நேற்று காலை 8 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த 31-வது வார்டு கவுன்சிலர், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜ், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சரவணம்பட்டி போலீசார் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story