ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x

காரைக்குடியில் ரத்த தான முகாம் நடக்கிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவற்றின் சார்பில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லெட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் பாலசுப் பிரமணியன் வரவேற்றார். காரைக்குடி குருதிக் கொடை யாளர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் பிரகாஷ் மணி மாறன் முன்னிலை வகித்தார். முகாமில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜ்குமார், புதுவயல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரியங்கா மற்றும் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட திட்ட அலுவலர்கள் அழகர், சித்ரா, பேராசிரியை கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story