ரத்ததான முகாம்
ஆற்காட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை இந்திய மருத்துவ சங்கம், லயன்ஸ் கிளப் மற்றும் நாராயணி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தின. ராணிப்பேட்டை துணை இயக்குனர் மணிமாறன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் பரமேஸ்வரன் ரத்த தானம் பற்றி பேசினார். கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் டாக்டர்கள் சீனிவாசன், வெங்கடேஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் லயன்ஸ் குழுமத்தினர் பங்கேற்றனர். இதில் திமிரி சுகாதார ஆய்வாளர் மற்றும் சித்தீஸ்வரர் கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் ஜெயபிரகாஷ் நாராயணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story