ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x

செய்யாறு உதவும் கரங்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு உதவும் கரங்கள் சார்பில் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிறுவனர் தி.எ.ஆதிகேசவன் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஜெ.சண்முகம், பொருளாளர் சி.ரவிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ கண்காணிப்பாளர் டி.பாண்டியன் முதல் நபராக ரத்ததானம் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

தன்னார்வலர்களிடம் உடல் எடை, ரத்த அழுத்தம், ரத்த வகை ஆகியவைகளை டாக்டர்கள் வி.கார்த்தி, ராஜேஸ்வரி ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர். முகாமில் 30 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.

ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பழ ஜீஸ், பிஸ்கெட், மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது.

முகாமில் சட்ட ஆலோசகர் டி.பி.சரவணன், வி.குமரேசன், சிங்காரவடிவேல், பாபு, காரத்தே சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை செய்யாறு அரசு மருத்துவமனை பணியாளர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story