ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை கே.ஆர்.மகாலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை கே.ஆர்.மகாலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமை தாங்கினார். கழகக்கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை பொது தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் செங்கதிர் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ரத்தம் சேகரித்தனர். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் எஸ்.பழனி ஏற்பாட்டில் ரத்த தான முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநில வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் வக்கீல் ராமநாதன், மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் ஆசைத்தம்பி, மாநில இளைஞரணி செயலாளர் திருஞானம், பேரவை இணைச்செயலாளர் ரஜினி, தேவகோட்டை நகரச் செயலாளர் ரவிக்குமார், காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, தேவகோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகு, வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர் பாவாசி கருப்பையா, கண்ணங்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரத்த தான முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.


Next Story