ரத்த தான முகாம்
ரத்த தான முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையமும் இணைந்து ரத்த தான முகாமினை நடத்தினர். முகாமினை பாரதிதாசன் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலர் டாக்டர் சரவணன் மேற்பார்வையில் 121 பேர் ரத்த தானம் செய்தனர். இதில் கல்லூரியின் முதல்வர் ரேவதி, மையத்தின் இயக்குனர் ஜானகிராமன், இளைஞர் செஞ்சிலுவை சங்க அமைப்பாளர்கள் ஜெயராமன் (பெரம்பலூர்), ஸ்டீபன் (அரியலூர்) மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் திட்ட அலுவலர்கள் செந்தில்குமார் (கல்லூரி), பிரதாப் (மையம்) ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story